ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி ராக்கி கயிறு அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தானை் சேர்ந்தவர் கமார் மோசின் ஷேக். இவர் இந்தியாவில் இருந்தபோது பிரதமர் மோடி அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னதாக மோடிக்கு அவர்ராக்கி கயிறு கட்டிக் கொண்டாடினார்.
இதுதான் தனது முதல் ரக்ஷா பந்தன் தினம் என்று கமார் மோசின் கூறிக் கொள்கிறார். அதன் பிறகு அவர் திருமணமாகி பாகிஸ்தான் சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பாகிஸ்தானிலிருந்து பிரதமர் மோடிக்கு, கமார் மோசின் மீண்டு ராக்கி கயிறு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து கமார் மோசின் கூறியதாவது:
ரக்ஷா பந்தன் தினத்தில் பிரதமர்மோடியைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தபோது நான் அவருக்கு ராக்கிகட்டினேன். மீண்டும் அவருக்குராக்கி கயிறு கட்ட வேண்டும்என்ற எண்ணம் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு அவருக்கு ராக்கி கயிறு அனுப்பினேன்.
தற்போது அவர் பிரதமராக இருக்கிறார். மிகச் சிறந்த ஆட்சியைத் தந்து வருகிறார். கரோனா வைரஸ் பிரச்சினையை மிகவும் சிறப்பாக சமாளித்து வருகிறார். மேலும் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
அதுதான் பிரதமர் மோடியின்தரம். நாட்டுக்காக உழைப்பவர் களை அவர் எப்போதும் ஊக்கப் படுத்திக் கொண்டே இருப்பார். அவருக்கு ரக்ஷா பந்தன் தின வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி. அவர் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன். விளையாட்டு வீரர்களை அண்மையில் அவர்சந்தித்து வாழ்த்தியதை தொலைக் காட்சியில் பார்த்தேன்.
எனது மகன் சுபைன் ஷேக், உலகிலேயே மிகக் குறைந்த வயதுடைய நீச்சல் சாம்பியனாக இருக்கிறான். பல பதக்கங்களை வென்றுள்ளான். ராக்கி கயிறு கட்ட என்னை இந்த முறை அவர் அழைப்பார் என நான் நம்புகிறேன்” என்றார். - பிடிஐ