கரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதியில் இருந்து மக்களுக்கு தடுப்பூசிகள் போடப் பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் இதுவரை 32.36 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது ஒரு புதிய சாதனையாகும். இதன் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்காவை இந்தியா முந்திவிட்டது. அமெரிக்காவில் இதுவரை 32.33 கோடிபேருக்கு தடுப்பூசி போடப்பட் டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைதடுக்கும் வகையில் தொடக்கத்தில் முன்கள பணியாளர்களுக்கும், அதைத் தொடர்ந்து படிப்படியாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது எனமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோடி பாராட்டு