திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கே.என். பாலகோபால் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, கரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதித் தொகுப்புக்கான ஒதுக்கீட்டை அவர் அறிவித்தார். மேலும், மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடுவதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்தார்.