கேரள மாநிலத்தில் முதல் முறையாக மாமனார் முதல்வர், மருமகன் எம்எல்ஏ :

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், இடதுசாரி முன்னணி அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் (77), கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புதிய ஆட்சியில் பினராயி விஜயனே மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. இவருடைய மருமகன் பி.ஏ.முகமது ரியாஸ் (44) கோழிக்கோடு பகுதியில் இடதுசாரிகள் செல்வாக்குள்ள பேபோர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் கேரள சட்டப்பேரவை வரலாற்றில் மாமனாரும் மருமகனும் இடம்பெறுவது இதுவே முதல்முறை. முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி முகமது ரியாஸ் திருமணம் செய்தார். பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார் வீணா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 secs ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

22 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

46 mins ago

க்ரைம்

52 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்