காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசு இயந்திரம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, பொதுமக்கள் நலன் குறித்து பேச வேண்டியது அவசியம்.
இந்த தருணத்தில், பொறுப்பான குடிமகன்கள் நாட்டுக்கு தேவைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் அரசியல் பணிகளை விடுத்து, நாட்டு மக்களின் இப்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதுதான் காங்கிரஸ் குடும்பத்தின் தர்மம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.