National

ஆந்திர மாநிலம் கர்னூலில் தனியார் பள்ளி மூடல் :

செய்திப்பிரிவு

மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் ஆந்திர மாநிலம், கர்னூலில் தனியார் பள்ளி மூடப்பட்டது.

ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கர்னூல் மாவட்டம், பத்திகொண்டா பகுதியில் தனியார் உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், 6-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, நேற்று முதல் பள்ளி தேதி குறிப்பிடாமல் மூடப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இதனால், கரோனா தடுப்பூசி விரைவில் அனைத்து தரப்பினருக்கும் போடப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT