இந்தியாவின் சேவைத் துறையில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி, அக்டோபர் மாதத்தில் எட்டப்பட்டுள்ளது. ஐஹெச்எஸ் மார்கிட் சர்வீசஸ் நிறுவனத்தின் குறியீடு இதை சுட்டிக்காட்டியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 55.2 புள்ளிகளாக இருந்த சேவைத் துறை வளர்ச்சி, அக்டோபர் மாதத்தில் 58.4புள்ளிகளை எட்டியுள்ளது. ஏறக்குறைய 400 நிறுவனங்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன.
கரோனா ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொய்வு கண்டிருந்த சேவைத்துறை படிப்படியாக மீண்டு வருகிறது. தற்போது கடந்த 11 ஆண்டுகளில் முன்னெப்போதும் எட்டப்படாத அளவுக்கு வளர்ச்சிஎட்டப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக சேவைத் துறையில் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில்துறையில் தேக்கமான சூழல் நிலவியபோதிலும் சேவைத் துறை வளர்ச்சி கண்டுள்ளது.
மூலப்பொருள் விலை உயர்வுஉள்ளிட்ட பிரச்சினைகள் நிலவியசூழலிலும் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் ஏற்பட்ட நெருக்குதல் சேவைத் துறைக்கு பெரும் சவாலாக இருந்தாலும் அக்டோபர் மாதத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் எட்டப்படாத அளவுக்கு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி அளவும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
உற்பத்தித் துறை வளர்ச்சிக் குறியீடு செப்டம்பரில் 55.3 புள்ளிகளில் இருந்து 58.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேவைத் துறை வளர்ச்சி காரணமாக வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது மாதமாக புதிய வேலைவாய்ப்புகளை இத்துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.