CalendarPg

டி20 உலகக் கோப்பை போட்டி - இந்திய அணியின் சீருடை அறிமுகம் :

செய்திப்பிரிவு

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வரும் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.

போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என 4 பகுதிகளில் நடைபெறவுள்ளது. பிரதான சுற்றான சூப்பர் 12, அக்.23 முதல் தொடங்குகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானை 24-ம் தேதிசந்திக்கிறது. இந்நிலையில் இந்தத்தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சீருடையை கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் அணிந்துஅறிமுகம் செய்யும் புகைப்படத்தை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT