மகளிர் விடுதி, முதியோர் இல்லங்கள் - ஜூலை 31-க்குள் உரிமம் பெறவேண்டும் :

By செய்திப்பிரிவு

மகளிர் விடுதிகள், முதியோர் இல்லங்கள் வரும் 31-ம் தேதிக்குள் உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

31-ம் தேதிக்குள் பதிவு செய்தல்

தமிழகத்தில் செயல்படும் அனைத்து கட்டணம், கட்டணமில்லா முதியோர் இல்லங்களும் தனியார், தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் நடத்தும் அனைத்து முதியோர் இல்லங்களும், முதியோர்களுக்கான குத்தகை விடுதிகள் மற்றும் வாடகை விடுதிகளும் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்பு மற்றும்நல விதிகளின் கீழ் ஜூலை 31-க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், சமூகநலத் துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி இந்த இல்லங்களை பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள், தங்கள் விடுதிகளை தமிழ்நாடு மகளிர் மற்றும்குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின்படி விடுதிகள் நடத்துபவர்கள் ஜூலை 31-க்குள் உரிமம் பெற்று கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், சமூகநலத் துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி இந்த விடுதிகளைபராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவுரைகளை பின்பற்றத் தவறுபவர்கள் மீது சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும்மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்