கரோனா 2-வது அலையில் தமிழகத்தில் 32 பேர் உட்பட நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ஜெ.ஏ.ஜெயலால் கூறியதாவது:
முதல் அலையில் 754 பேர்
கரோனா 2-வது அலையில் தமிழகத்தில் 32 பேர் உட்பட நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுதொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து மருத்துவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவாக வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பணிச் சுமை அதிகரித்துள்ளதால், கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.