CalendarPg

லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதல்வர் உத்தரவு - ஆவின் பால் விலை விவரம் தமிழக அரசு வெளியீடு :

செய்திப்பிரிவு

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் 16-ம் தேதி முதல்ஆவின் பால் புதிய விலை விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஸ்டாலின் முதல்வரானதும், 5முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் 2-வதாக, மக்கள்நலன் கருதி, மே 16-ம் தேதி முதல்ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைத்து விற்பனை செய்ய அரசாணை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, ஆவின் பார்லர்கள், சில்லறை விற்பனை கடைகளில் 16-ம் தேதி முதல் (தற்போதைய விலை அடைப்புக் குறிக்குள்) சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.40 (ரூ.43), அரை லிட்டர்ரூ.20 (ரூ.21.50), நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.22 (ரூ.23.50), நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் ரூ.24 (ரூ.25.50), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.18.50 (ரூ.20), டீமேட் பால் ஒரு லிட்டர் ரூ.57 (ரூ.60) என விலை குறைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.

பால் அட்டைதாரருக்கு சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர்ரூ.37 (ரூ.40), அரை லிட்டர்ரூ.18.50 (ரூ.20), நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.21 (ரூ.22.50), நிறை கொழுப்பு பால் ரூ.23 (ரூ.24.50), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.18 (ரூ.19.50) என விற்பனை செய்யப்பட உள்ளது.

நுகர்வோருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள பால் அட்டைகளுக்கு உண்டான வித்தியாச தொகை அடுத்த மாதம் அட்டைவழங்கும்போது ஈடுசெய்யப்படும். சென்னையில் ஆவின் பால்விநியோகம் குறித்த தகவலுக்கு 1800-425-3300, 044-23464575, 23464576, 23464578 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

SCROLL FOR NEXT