CalendarPg

6 மாநிலங்களுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு - ‘கரோனா தொற்று இல்லை’ சான்றிதழ் கட்டாயம் :

செய்திப்பிரிவு

சென்னையில் இருந்து விமானம் மூலம் 6 மாநிலங்களுக்கு செல்லும்பயணிகளுக்கு ‘கரோனா தொற்று இல்லை’ என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் 2-ம் அலை தீவிரமடைந்துள்ளது. பரவலைத் தடுக்க மத்திய மாநில, அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதுவரை தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும் தமிழகம் வருபவர்களுக்கு மட்டுமே 72 மணி நேரத்துக்கு முன்னதாக செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று சான்றிதழ் கட்டாயமாக இருந்தது.

இந்நிலையில், சென்னையில் இருந்து அந்தமான், புவனேஸ்வர் (ஒடிசா), ஜெய்ப்பூா் (ராஜஸ்தான்), இம்பால் (மணிப்பூா்), பேக்டோக்ரா (மேற்கு வங்கம்), ராஜ்கோட் (குஜராத்) ஆகிய 6 இடங்களுக்கு செல்பவர்களுக்கு ‘கரோனா தொற்று இல்லை’ என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தனி விமானங்களுக்கும் பொருந்தும்

தனி விமானங்களில் இந்த நகரங்களுக்கு பயணிக்கும் பயணிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று விமான நிலையம் அறிவித் துள்ளது.

SCROLL FOR NEXT