தொழிற்சாலைகள் சுற்றுச் சூழல் துறையின் அனுமதி (இசி) இல்லாமல் இயங்கக்கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விஷயத்தில் சலுகை அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் பார்மல்டிஹைடு தயாரிக்கும் நிறுவனங்கள் சுற்றுச் சூழல் துறை அனுமதி பெறுவதற்கு முன்பாக 6 மாதம் செயல்பட்டுள்ளன. இந்நிறுவனங்களுக்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனம் தஸ்தக் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு என்ஜிடி தலைவர் நீதிபதிஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த நிறுவனமும் செயல்படக் கூடாது. இத்தகைய அனுமதிக்கு முன்பாக மாநில அரசுகள் அனுமதி வழங்க அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். - பிடிஐ