BackPg

அனைவருக்கும் இலவச தடுப்பூசி ராகுல் வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவுவதை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டோ ருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது.

இந்நிலையில், மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிசெலுத்தப்பட வேண்டும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘விவாதித்தது போதும். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பாஜகவின் தவறான நிர்வாக முறைக்கு இந்தியா பலிகடா ஆகிவிடக்கூடாது’’ என்று கூறியுள்ளார்.

தடுப்பூசிகளுக்கு வெவ்வேறு விதமான விலைகளை நிர்ணயிக்கக் கூடாது என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT