BackPg

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் - இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல் : வெற்றியுடன் தொடங்குமா? விராட் கோலி குழு

செய்திப்பிரிவு

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி 20 தொடரைவென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வென்றிருந்தது. அதேவேளையில் டி 20 தொடர் கடும் சவால் நிறைந்ததாக அமைந்தது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்த கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு கோப்பையை கைப்பற்றியிருந்தது.

இதனால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. இந்தத் தொடர் தடுமாறி வரும்35 வயதான தொடக்க வீரரானஷிகர் தவணுக்கு முக்கியத்துவம்வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனெனில் டி 20 தொடரின் தொடக்க பகுதியில் உயர்மட்டசெயல்திறனை வெளிப்படுத்தத் தவறியதால் அதன் பின்னர்வெளியே அமரவைக்கப்பட்டிருந் தார் தவண். தற்போது அவரது இடத்துக்கு ஷுப்மன் கில் மல்லுக்கட்ட ஆயத்தமாக உள்ளார். மேலும் அணிக்கு வெளியே பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஆகியோரும் வாய்ப்புக்காக காத்திருப்பது ஷிகர் தவணுக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.

எனினும் இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவண், ரோஹித் சர்மாவுடன் இணைந்து பேட்டிங்கை தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டியை பொறுத்தவரையில் போதிய கால அவகாசம் இருக்கும் என்பதாலும், ஏராளமான அனுபவத்தை ஷிகர் தவண் கொண்டிருப்பதாலும் இழந்த பார்மை அவர் மீட்டெடுக்கக்கூடும்.

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி 20 தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்ததால் அவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக் கூடும். ஒருநாள் போட்டியில் விராட் கோலி கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார். தற்போது அவர், சிறந்த பார்மில் இருப்பதால் சதங்களின் வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும்.

டாப் ஆர்டர் இடத்தை இழந்துள்ள கே.எல்.ராகுல் மேம்பட்ட திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். டி 20 தொடரில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பந்த் அணியில் தனது இடத்தை நிலைப்படுத்திக் கொள்ள உயர் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்தத் தொடரில் முக்கிய பங்குவகிக்கக்கூடும். அதேவேளையில் விளையாடும் லெவனில் இடம் பெறுவதில் மும்பையை சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடையே போட்டி நிலவும் சூழலும் உருவாகி உள்ளது. சூர்யகுமார் யாதவ் 4-வது டி 20 ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசியிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமாருடன், ஷர்துல் தாக்குர், டி.நடராஜன் ஆகியோர் நம்பிக்கை அளிப்பவர் களாக உள்ளனர்.

நேரம் : பிற்பகல் 1.30

நேரலை : ஸ்டார் ஸ்போர்ட்ஸ

SCROLL FOR NEXT