பாட்டியாலா: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் இந்திய தடகள வீரர் முரளி சங்கர்.
24-வது பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் கேரளாவைச் சேர்ந்த 21 வயதான முரளி சங்கர் 8.26 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனை படைத்ததுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி நிலை 8.22 மீட்டர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.