ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை சிட்டி எப்சி - ஏடிகே மோகன் பகான் அணிகள் இன்று இரவு 7.30 மணி கோவாவில் உள்ள பதோர்தா மைதானத்தில் பலப் பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளுமே இந்த சீசனில் தலா 12 வெற்றி, 4 டிரா, 4 தோல்விகளுடன் இறுதி சுற்றில் கால்பதித்துள்ளன. செர்ஜியோ லோப்ரா பயிற்சியாளராக உள்ளமும்பை அணி, இறுதியில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் கோவாவை வீழ்த்தியிருந்தது.
லீக் சுற்றில் இரு முறை ஏடிகே மோகன் பகான் அணியைமும்பை அணி தோற்கடித்திருந் தது. ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கிலும் பிப்ரவரியில் நடைபெற்ற ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கிலும் மும்பை அணிவெற்றி கண்டிருந்தது. இதனால்மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்தி முதன் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது மும்பை அணி.