ஒன்பிளஸ் 11R 5ஜி | ஸ்மார்ட்போன் 
தொழில்நுட்பம்

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இந்த போனுக்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 7-ம் தேதி இந்த போன் அறிமுகமானது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரேஷன் 1 சிப்செட்
  • 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • 5,000mAh பேட்டரி
  • 100 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
  • பின்பக்கத்தில் 3 கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது
  • இந்த போனின் விலை ரூ.38,999 மற்றும் ரூ.43,999 என அறிவிக்கப்பட்டுள்ளது
  • அறிமுக சலுகையாக ரூ.1000 தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் போனை வாங்கும் முதல் 1000 பேருக்கு ஒன்பிளஸ் கேமிங் ட்ரிக்கர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
SCROLL FOR NEXT