சாம்சங் கேலக்சி எஸ்23 போனின் விலையை கலாய்த்த ஒன்பிளஸ்: அப்படி என்ன சொல்லியுள்ளது?

By செய்திப்பிரிவு

சென்னை: சாம்சங் நிறுவனம் கேலக்சி எஸ்23 சீரிஸ் போன்களை இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த போன்களின் விலையை கலாய்த்து தள்ளியுள்ளது மற்றொரு எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனமான ஒன்பிளஸ். அப்படி என்ன சொல்லியுள்ளது அந்நிறுவனம் என்பதை பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களில் விலை உயர்ந்த போனாக கேலக்சி எஸ்23 சீரிஸ் போன்கள் அறிமுகமாகி உள்ளன. கேலக்சி எஸ்23, கேலக்சி எஸ்23 பிளஸ் மற்றும் கேலக்சி எஸ்23 அல்ட்ரா என மூன்று போன்கள் தற்போது இந்த சீரிஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.74,999 முதல் ரூ.1,54,999 வரையில் உள்ளது. ரேம், ஸ்டோரேஜ் திறன், கேமரா போன்ற அம்சங்களை பொறுத்து விலையில் மாற்றம் உள்ளது.

இதைத்தான் கலாய்த்துள்ளது ஒன்பிளஸ். அதோடு அந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள ஸ்மார்ட்போனையும் இதன் ஊடாக புரோமோட் செய்துள்ளது. சாம்சங் கொரியாவை சேர்ந்த நிறுவனம். ஒன்பிளஸ் சீன தேச நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சந்தையில் கிடைக்கும் புரோ, அல்ட்ரா, மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் போல அடுத்து நாங்கள் வெளியட உள்ள போனின் விலை இருக்காது’, ‘ஏன் இதை கேலக்சி என சொல்கிறார்கள்?’, ‘சார்ஜர் எங்கே?’ என ஒன்பிளஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்