வாட்ஸ்அப் கட்டணச் சந்தா சேவை: இப்போதைக்கு பீட்டா பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தின் ப்ரீமியம் கட்டணச் சந்தா சேவை இன்னும் அதிகாரபூர்வமாக மெட்டா நிறுவனம் வெளியிடவில்லை. இருந்தாலும் இப்போதைக்கு இதனை பீட்டா பயனர்கள் பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை வாட்ஸ்அப் அப்டேட் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் டபிள்யூ.ஏ பீட்டா இன்போ தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் கட்டணச் சந்தா முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் பயனர்களுக்கு தனித்துவ மிக்க அம்சங்களை பயன்படுத்த முடியும் என தெரிகிறது. இது வழக்கமான பயனர்களுக்கு இல்லாமல் பிஸினஸ் கணக்கை கொண்டுள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனத் தெரிகிறது. அதற்கேற்ற வகையில் ப்ரீமியம் மெனு இருக்குமாம்.

ஒரே வாட்ஸ்அப் எண்ணை பத்து சாதனங்கள் வரை லிங்க் செய்து பயன்படுத்தும் வசதி, கான்டக்ட் எண்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி போன்றவை இருக்கும் என தெரிகிறது. இந்த சேவை அதிகாரபூர்வமாக வெளியான பிறகே இதற்கான கட்டண விவரங்கள் தெரியவரும்.

மேலும், கூகுள் மீட் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் போல லிங்க் மூலம் வீடியோ காலில் இணையும் வசதியை வாட்ஸ்அப் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது. இது குறித்த தகவலை மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்