உங்களது இன்ஸ்டா ரீல்ஸை பேஸ்புக்கில் போஸ்ட் செய்வது எப்படி?

By செய்திப்பிரிவு

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிற்கான புதிய ரீல்ஸ் அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் டிக் டாக்குக்கு தடை விதிக்கப்பட்டப் பிறகு இன்ஸ்டாகிராமின் புகழ் பரவலாகிவிட்டது. இன்ஸ்டாகிராமின் இலக்கு இளைஞர்கள் என்பதால் அவர்களை குறிவைத்து அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் புதிய அறிவிப்பை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது. அதன்படி , இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸை பேஸ்புக்கிலும் பயன்படுத்திக் கொள்ளும்படி புது அம்சம் கொண்டுவரப்பட உள்ளது.

எப்படி ஷேர் செய்வது: இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவு செய்து கொள்ளுங்கள், பின்னர் நெக்ஸ்ட் ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் உள்ள ஃபேஸ்புக் ஆப்ஷனை க்ளிக் செய்தால் அந்த ரீல்ஸ் பேஸ்புக்கிலும் பதிவு செய்யப்படும்.

மேலும் பேஸ்புக்கில் போடப்படும் ஸ்டோரியில் இருந்து தானாகவே ரீல்ஸ் உருவாக்கப்படும் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ரீல்ஸில் ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. முன்பு புகைப்படங்கள், ஸ்டோரியில் ஸ்டிக்கர் பயன்படுத்தும் முறை இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது ரீல்ஸிலும் ஸ்டிக்கர் பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்