தொழில்நுட்பம்

டெலிகிராம் ப்ரீமியம் | கூடுதல் அம்சங்களுடன் கட்டணச் சந்தா அறிமுகம் - விரிவான பார்வை

Ellusamy Karthik

பயனர்களை கவரும் கூடுதல் அம்சங்களுடன் கட்டண சந்தா நடைமுறையை டெலிகிராம் நிறுவனம் தனது ப்ரீமியம் சேவையின் மூலம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலும் இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. டெலிகிராம் ப்ரீமியம் குறித்து விரிவாக பார்ப்போம்.

வழக்கமாக ஓடிடி தளங்களை பயன்படுத்ததான் பயனர்கள் சந்தா செலுத்துவார்கள். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில், கிளவுடை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் இன்ஸ்டான்ட் மெசேஜிங் சேவையை வழங்கி வரும் டெலிகிராம் மெசேஞ்சர் சந்தா நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெலிகிராம் தளத்தின் சேவையை ஒவ்வொரு மாதமும் 700 மில்லியன் பயனர்கள் ஆக்டிவாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண முறை சந்தாவை அறிமுகம் செய்துள்ள நிலையில், கட்டணம் செலுத்தாத பயனர்களுக்கும் தங்கள் தளத்தில் மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்கும் வகையில் சில மாற்றங்களை டெலிகிராம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கட்டண முறையில் தங்கள் தளத்தின் சேவையை சந்தா செலுத்தி பெற விரும்பும் பயனர்களுக்கு சில கூடுதல் அம்சங்களை பிரத்யேகமாக வழங்குகிறது டெலிகிராம். அதன்படி 4ஜிபி வரையிலான ஃபைல்களை அப்லோட் செய்வது, அதிவேக டவுன்லோட் வசதி மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை டெக்ஸ்ட் மெசேஜ்களாக மாற்றும் அம்சம் போன்ற அக்செஸ்களை சந்தா செலுத்திய பயனர்கள் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் நாட்டுக்கு நாடு மாறுபடும் எனத் தெரிகிறது. இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்கள் மாதத்திற்கு ரூ.469 சந்தா செலுத்தி ப்ரீமியம் சேவையை பெறலாம். அதுவே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான கட்டண விவரம் வெளியாகவில்லை.

இது தவிர டெலிகிராம் ப்ரீமியம் சேவை மூலம் பயனர்கள் சுமார் 1000 சேனல்களை ஃபாலோ செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் 200 சேட் (Chat) வீதம் 20 சேட் ஃபோல்டர்களை உருவாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 சாட்களை மெயின் லிஸ்ட்டில் பின் (Pin) செய்து கொள்ள முடியுமாம்.

டெலிகாரம் செயலியில் சந்தா செலுத்திய பயனர்கள் நான்காவது அக்கவுண்டை இணைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பயனர்கள் தங்களுக்கு பிடித்த 10 ஃபேவரைட் ஸ்டிக்கர்களை Save செய்து கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தா செலுத்தியுள்ள பயனர்கள் நீண்ட பயோவை லிங்க் உதவியுடன் எழுதிக் கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதேபோல மீடியா கேப்ஷன்களுக்கு ஸ்பெஷல் கேரக்டர்களை சேர்த்து பயன்படுத்த முடியும் என சொல்லப்பட்டுள்ளது. சாட் லிஸ்டை தங்கள் விருப்பம் போல பயனர்கள் அமைத்துக் கொள்ளும் வசதியையும் இது வழங்குகிறது. இதன்மூலம் ஆல் சேட்ஸ் டேபிற்கு பதிலாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வழக்கமான டெஸ்டினேஷனாக பயனர்கள் அதை மாற்றிக் கொள்ள முடியுமாம்.

மாதந்தோறும் ஸ்டிக்கர் அப்டேட். ஃபுள் ஸ்க்ரீன் அனிமேஷன் எஃபெக்ட் கொண்ட ஸ்டிக்கர்களை சந்தா செலுத்தும் பயனர்கள் அனுப்பவும், பெறவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே சந்தா செலுத்தாத பயனர்கள் அந்த ஸ்டிக்கர்களை பார்க்கலாம் எனவும், அதை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அனிமேட்டட் ப்ரொபைல் படத்தை சந்தா செலுத்தும் பயனர்கள் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தா செலுத்திய பயனர்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அதுகுறித்து விவரிக்கும் வகையில் பேட்ஜ் ஒன்றும் வழங்கப்படுகிறது. அது சாட் லிஸ்ட், சாட் ஹெட்டர்ஸ் மற்றும் குழுவில் உள்ள மெம்பர் லிஸ்டில் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சந்தா செலுத்தும் பயனர்கள் ஸ்பான்சர் மெசேஜ்களை இனி பார்க்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது தங்கள் தளத்தில் உள்ள அனைத்து பயனர்களுக்குமான பொதுவான அப்டேட்களையும் கொண்டு வந்துள்ளது டெலிகிராம். அது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்களுக்கும் பொருந்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக வெரிஃபிகேஷன் பேட்ஜ்களையும் டெலிகிராம் கொண்டு வந்துள்ளது. இருந்தாலும் இப்போதைக்கு ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வெரிஃபிகேஷன் பேட்ஜ் பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் இந்த புதிய அம்சங்கள் எல்லாம் வரும் நாட்களில் படிப்படியாக பயனர்களுக்கு அப்டேட் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதத்திற்கு 700 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை டெலிகிராம் தற்போது பெற்றுள்ளது. இது அதன் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இருந்தாலும் அதன் போட்டியாளரான வாட்ஸ்அப் தளத்தில் உள்ள பயனர்களுடன் ஒப்பிடும் போது டெலிகிராம் வெகு தூரம் பின்தங்கி உள்ளது. அதேநேரத்தில் சந்தா நடைமுறையை வாட்ஸ்அப் உட்பட எந்தவொரு மெசேஜிங் தளமும் கொண்டுவரவில்லை. தனது பயனர்களின் மூலம் நிதி ஆதாயத்தை பெரும் நோக்கில் இந்த முயற்சியை டெலிகிராம் மேற்கொண்டுள்ளது. வரும் நாட்களில் வாட்ஸ்அப் தளமும் இதை கொண்டு வரலாம்.

SCROLL FOR NEXT