கரூர்: கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவராக இருப்பவர் கார்த்திக் (35).
இவர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் தமிழக அரசு, முதல்வர், மின் துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக ஐடி பிரிவு நிர்வாகி திலீபன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, தமிழக அரசு, முதல்வர், அமைச்சர் ஆகியோருக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்பியதாக கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து கார்த்திக்கை நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.