‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ பொம்மன், பெள்ளிக்கு தலா ரூ.1 லட்சம் நிதி - தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வர் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ‘திஎலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கர் விருது பெற்ற ‘ தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதி சந்தித்தனர். இருவருக்கும் முதல்வர்மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததுடன், பாராட்டுக் கேடயம் மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளையும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: இந்த ஆவணப்படம் மூலம் தமிழக வனத்துறையின் செயல்பாடு, யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெறறுள்ளது. தமிழகத்தில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலை - தெப்பக்காடு மற்றும் ஆனைமலை - கோழிகமுத்தியில் 91 பணியாளர்கள் உள்ளனர். இந்ததருணத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம்முதல்வர் நிவாரண நிதியில் இருந்துவழங்கப்படும். மேலும், யானைபராமரிப்பாளர்களாகிய இவர்கள்,வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டுக்கு உகந்த வீடுகள் கட்ட ரூ. 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் என்றார்.

நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, புலிகள் காப்பக கள இயக்குநர் து.வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

முதல்வரிடம் வாழ்த்து பெற்றபொம்மன், பெள்ளி செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் எங்களை அழைத்து வாழ்த்தினார். இரண்டு யானைக் குட்டிகளை நாங்கள் வளர்த்தோம். குட்டிகளை வளர்ப்பது சாதாரண செயல் அல்ல. அந்த குட்டிகள் பெரிதாகிவிட்டதால், வேறு இடத்துக்கு பயிற்சிக்காக மாற்றியுள்ளனர். இந்த குட்டிகளுக்கு தற்போது நல்லமுறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிறு குட்டிகளாக இருக்கும்போது அவை நாம் சொல்வதை கேட்காது.

ஒன்றரை, 2 வயது ஆன பின்னர்தான் நாம் சொல்வதை அவைகேட்டு, செய்யும். நாம் குழந்தைகளை எப்படி வளர்ப்போமோ அதை விட ஒரு படி உயர்வாக நாம்அவற்றை பார்க்க வேண்டும். தேவையான நேரத்தில் பால் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். தற்போது பெரியதாகிவிட்டதால் பயிற்சிக்கு அனுப்பினால்தான், கும்கி உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த முடியும். ஊர்மக்கள் வன அதிகாரிகள் கூறுவதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்