ஆன்லைன் சூதாட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது: புதிய தமிழகம் தலைவர் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வைபோல ஆன்லைன் சூதாட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது: மாதம் ஒருமுறை மின் அளவீடு செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கொடுத்த வாக்குறுதிகளை காலப்போக்கில் மக்கள் மறந்துவிடுவார்கள் என திமுக நினைப்பது தவறானது.

பல முறைகேடுகள் மூலம் நடந்த ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை ரத்து செய்து, மறுதேர்தல் நடத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இல்லை. நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதைபோல, தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு மத்திய அரசுதான் சட்டம் இயற்ற முடியும் என்ற வலுவான காரணத்தை ஆளுநர் கூறியிருக்கிறார். அதை சட்டரீதியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மீது குற்றம் சாட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


VIEW COMMENTS
test3

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 secs ago

தமிழகம்

7 mins ago

ஓடிடி களம்

28 mins ago

test3

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

test4

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்