அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே விண்ணப்பம்: இன்றைக்குள் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இன்றைக்குள் (மார்ச் 11) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத்துறை சார்பில், அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக 23 மாவட்டங்களில் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அறங்காவலர் பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த விண்ணப்பத்தில் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி அரசியல் சார்புகுறித்த கேள்விகள் இடம்பெறவில்லை என மனுதாரரானரங்கராஜன் நரசிம்மன் புகார் தெரிவித்தார்.

தற்போதுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்தகேள்வி இடம் பெற்றுள்ளதாக அறநிலையத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதையடுத்து, இணையதளத்தில் இடம் பெற்றுள்ள பழைய விண்ணப்பப் படிவங்களை நீக்கவும், அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் இன்றைக்குள் (மார்ச் 11) பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 secs ago

தொழில்நுட்பம்

5 mins ago

இந்தியா

33 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கல்வி

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்