சென்னை | துர்கா ஸ்டாலின் சகோதரி காலமானார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி (62), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி என 2 சகோதரிகளும், ராஜமூர்த்தி எனஒரு சகோதரரும் உள்ளனர். இதில்சாருமதி சென்னையில் வசித்துவந்தார். அவருக்கு கணவர் சண்முகசுந்தரம், மகன் கார்த்திகேயன், மருமகள் ரேவதி, மகள் அபிராமி, மருமகன் விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சிலநாட்களாக சென்னை, அப்போலோமருத்துவமனையில் சாருமதி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மறைந்த சாருமதியின் உடல் சென்னை, எழும்பூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சாருமதியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பொன்முடி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், பெரியகருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், என்.ஆர்.இளங்கோ, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள்உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சாருமதியின் இறுதிச்சடங்கு, கண்ணம்மாபேட்டை மயானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

52 mins ago

க்ரைம்

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்