போயஸ் கார்டனில் பொதுமக்களுக்கு அனுமதி

By ம.பிரபு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தைப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தையும் காணப் பொதுமக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பொதுமக்கள் போயஸ் கார்டன் வீட்டில் அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கமாக தேர்தல் வெற்றிகள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட நேரங்களில் மட்டுமே, மக்கள் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், இன்று போயஸ் கார்டன் வேதா இல்லத்தின் வாசல் வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே நேரம் அங்கு புகைப்படம் எதுவும் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. நேரம் செல்லச்செல்ல போயஸ் கார்டனுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்வதால், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக ஜெயலலிதா பேட்டியளிக்கும் வாசல் கதவு அருகே இருந்த சசிகலா, அங்குள்ள பொது மக்கள் சிலரிடம் பேசினார்.

இதுகுறித்த படத்தொகுப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

22 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

மேலும்