உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ் காவலர்கள் குறைதீர் முகாம் சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. முகாமில் காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். 
தமிழகம்

காவலர்கள் குறைதீர் முகாமில் போலீஸாரின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்ற காவல் ஆணையர்

செய்திப்பிரிவு

சென்னை: காவலர்கள் குறைதீர் முகாமில்காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று போலீஸாரிடம் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றுக் கொண்டார்.

உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ், சென்னை காவல்துறையில் காவலர்கள் குறைதீர் முகாம் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் இதுவரை 2 கட்டங்களாக நடைபெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நேற்று 3-வது கட்டமாக காவலர்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் போலீஸாரிடமிருந்து பெறப்பட்ட 257 மனுக்களை ஆணையர் பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

பணி இட மாறுதல், தண்டனை களைதல், ஊதிய முரண்பாடு களைதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவித் தொகை பெற்றுத் தர கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக காவலர்கள் மனு அளித்தனர். இன்று 2-வது நாளாக காவல் ஆணையர் மனுக்களை பெற உள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வில்தலைமையிடத்து கூடுதல் காவல்ஆணையர் லோகநாதன், இணைஆணையர் சாமூண்டீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT