சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து `ஹுண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனத்தின் `மிஷன் சென்னை’ என்ற திட்டத்துக் கான நடமாடும் மருத்துவ பரிசோதனை மைய வாகனத்தை போக்குவரத்துஅமைச்சர் சிவசங்கர், மாநகர போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ வாகனம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு, ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பாக ‘மிஷன் சென்னை’ என்னும் திட்டத்தின்கீழ் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் நடமாடும் மருத்துவ வாகன சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் உள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் அறங்காவலர் (எச்எம்ஐஎப்)சி.எஸ்.கோபால கிருஷ்ணன், போக்குவரத்துத் துறை செயலர்கே.கோபால், ஹுண்டாய் மோட்டார் இந்தியா செயல் இயக்குநர் டி.எஸ்.கிம், ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர் சி.எஸ்.கோபால கிருஷ்ணன், போக்குவரத்துக் கழகஉயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT