தமிழகம்

மழை, வெள்ள பாதிப்புக்கான நிவாரணத் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை இரட்டிப்பாக்கவேண்டும் என முதல்வரை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இயற்கைஇடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இயற்கை சீற்றம் மற்றும் இடர்பாடுகளால் உயிரிழந்தவருக்கு ரூ.4 லட்சம், 60 சதவீதத்துக்கு மேல் ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம், அதற்குக் கீழ்ஊனம் ஏற்பட்டால் ரூ.59,100, முழுமையாக இடிந்த வீடுகளுக்கு ரூ.95.100, பகுதியாக இடிந்த வீடுகளுக்கு ரூ.5,200 என வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் உடமைகளைஇழந்து நிவாரண முகாம்களில்தங்க வைக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையும் மிகக் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணம்போதுமானதாக இல்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.

இயற்கை இடர்பாடுகள் மற்றும்சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணத் தொகைக்கான அரசாணையை திருத்தி இரட்டிப்பாகவழங்கவும், உயிரிழப்பு, ஊனம்ஏற்படும் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT