பழவேற்காடு முதல் குமரி வரையிலான கிழக்கு கடற்கரையை பாதுகாக்க கோரிய  வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மீனவர் தந்தை செல்வராஜ்குமார் மீனவர் நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், "நாட்டின் 1,200 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் பல்வேறு காரணங்களால் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல் அலை, கடல் உள்வாங்குவது, நீரோட்ட மாற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தில் 50 கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பை தடுப்பதற்கான திட்டத்தை அமல்படுத்தும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரையை பாதுகாத்து, இந்தப் பகுதிகளில் ஏற்படும் கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்