விசிக பெண் கவுன்சிலரை திமுக நிர்வாகி தாக்க முயற்சி: புகாரின் மீது போலீஸார் விசாரணை 

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அசோக் நகர், 80-வது தெருவில் மழை நீர் தேங்கி நின்றது. அதை அகற்றும் பணியில் அப்பகுதி பெண் கவுன்சிலரான சாந்தி என்ற யாழினி (135-வது வார்டு) கடந்த 2-ம் தேதி ஈடுபட்டார். சாந்தி மயிலாப்பூரைச் சேர்ந்தவர். மேலும், தேர்தலின் போது அப்பகுதி கூட்டணிக் கட்சியான விசிகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த திமுக வட்ட செயலாளர் செல்வகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரக்தியில் இருந்தனர். இந்நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் சாந்தி ஈடுபட்டிருந்தது செல்வகுமாருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த இடத்துக்குச் சென்ற செல்வகுமார், 'நீங்கள் எங்கள் பகுதி கவுன்சிலராக இருந்தாலும், எங்களை மீறி இங்கு செயல்பட முடியாது. தன்னிச்சையாக எப்படி நீங்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபடலாம்' என கூறி வாக்கு
வாதம் செய்துள்ளார்.

அவருக்கு ஆதரவாக திமுகவைச் சேர்ந்த மேலும் சிலரும் வந்து தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பெண் கவுன்சிலரை இரும்பு கம்பியாலும் தாக்க பாய்ந்துள்ளனர். தகவல் அறிந்து கே.கே.நகர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து, காவல் நிலையம் சென்ற சாந்தி, தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது புகார் அளித்தார். அதன்படி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், திமுகவினர் பெண் கவுன்சிலரிடம் தகராறில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மோதல் குறித்து பெண் கவுன்சிலரான சாந்தி கூறுகையில், "திமுக வட்ட செயலாளர் செல்வகுமார், அவரது ஆதரவாளர் மணி உட்பட சிலர் நான் கவுன்சிலராக பொறுப்பேற்றது முதலே என்னிடம் தகராறு செய்து வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

2 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

26 mins ago

க்ரைம்

32 mins ago

க்ரைம்

41 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்