அக்.17-ல் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும்போது தொடர் மறியல் போராட்டம்: ஜேஏசி அறிவிப்பு

By சுப.ஜனநாயக செல்வம்

மதுரை: “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆண்டாக நடைபெறாத ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 17-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடக்கும்போது தொடர் மறியல் போராட்டம் நடைபெறும்” என்று ஜேஏசி அறிவித்துள்ளது.

மதுரையில் இன்று கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜேஏசி) சார்பில் மூட்டா அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதன் ஒருங்கிணைப்பாளர் மு.நாகராஜன் கூறியது: "கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக்குழுவின் தொடர் போராட்டங்களால் அதிமுக அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான பணி மேம்பாடு சம்பந்தமாக 2021 ஜனவரி 11ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி 2021 மே 4-ல் அரசாணையை அமல்படுத்த கல்லூரிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அரசாணை 2022 அக்டோபர் 8ம்தேதி வரை அரசு கல்லூரி மற்றும் உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் முழுமையாக அமல்படுத்தப்படுத்தவில்லை. மேலும், 2006 மற்றும் அதற்குப்பின் பணியில் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு 8 ஆண்டுகளாக பணி மேம்பாடு வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆண்டாக நடைபெறாத ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.11-ல் அனைத்து கிளைகளிலும் வாயில் முழக்கப் போராட்டம் நடைபெறும். அக்.18-ல் அனைத்து கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களிலும் கோரிக்கை முழக்கப் போராட்டம், அக்.30-ல் அனைத்து கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் மையங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அக்.17-ல் சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும்போது தொடர் மறியல் போராட்டம் நடைபெறும்.

தற்போது தமிழகத்தில் 101 அரசுக் கல்லூரிகள் உள்ளன. 2015-ம் ஆண்டுக்குப்பின் பணி நியமனம் நடைபெறாததால் 7,500 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுமார் 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதை உடனடியாக நிரப்பவேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

28 mins ago

கல்வி

25 mins ago

தமிழகம்

41 mins ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

சுற்றுலா

1 hour ago

மேலும்