தமிழகம்

இலங்கை தமிழர் நலனுக்காக சென்னை திமுக கவுன்சிலர்கள் முதல்வரிடம் ரூ.11.90 லட்சம் நிதி

செய்திப்பிரிவு

இலங்கை தமிழர் நலன் காப்பதற்காக, முதல்வர் ஸ்டாலினிடம் சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் ரூ.11.90 லட்சம் வழங்கினர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் திமுக கவுன்சிலர்கள் நேற்று சந்தித்தனர்.

அப்போது, இலங்கை தமிழர் நலன் காக்க சென்னை மாநகராட்சியின் திமுக கவுன்சிலர்கள் சார்பில் முதல்கட்டமாக ரூ.11.90 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், முன்னாள் எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் என்.சிற்றரசு, மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ந.ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT