தமிழகம்

இலங்கையின் அத்துமீறலை தடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் இதுபோன்ற அத்துமீறல் போக்கை மத்திய, மாநில அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT