சென்னை | பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் செப். 20-ல் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வரும் 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

இது தொடர்பாக அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கப் பொதுச் செயலர் வி.தயானந்தம், மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 2020 மார்ச் 31-ல்3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதேபோல, 2022 ஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதத்தில் 300-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால், அனைத்து பணிமனைகளிலும் ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்கள் அவரவர் வழித்தடங்களில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி இல்லாத நடத்துநர்களுக்கு, மாற்றுப் பணி வழங்க வேண்டும்.

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி உயர்த்தப்பட்ட அடிப்படை ஊதியம்,பஞ்சப்படி, மிகை நேர ஊதியம்வழங்க வேண்டும். இவ்வாறுஅந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி அனைத்து பணிமனைகளிலும் ஆர்ப்பட்டம் நடைபெறும் என்று அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்