தகுதித் தேர்வு நிபந்தனையால் பரிதவிக்கும் 1000+ ஆசிரியர்கள்: தமிழக முதல்வரால் தீர்வு கிட்டுமா?

By என். சன்னாசி

சென்னை: தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தகுதித் தேர்வு நிபந்தனையால் தற்போது, தங்கள் பணிக்கு ஆபத்து நேரிடுமோ என்ற அச்சத்திலும், மன உளைச்சலிலும் பணியாற்றுகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திரன், பூபதி, சிவஞானம், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவின் விவரம்: ”அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 2017-ம் ஆண்டிலும், அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2013-ம் ஆண்டிலும் தகுதித் தேர்வு நிபந்தனை ரத்து செய்து, ஒரு வார பயிற்சி அளித்து அனைத்து சலுகைகளையும் பெறுகின்றனர்.

சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களான எங்களுக்கும் ஒரு வார கால புத்தாக்க, பயிற்சி மட்டும் அளித்து, பாதுகாக்கப்படுவர் என, கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உறுதியளித்தார். கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் வாயிலாக பணியை காப்பாற்றிக்கொள்ளும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு எங்களுக்கும், விடியல் பிறக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்த நிலையில், தற்போது, நாங்கள் அச்சப்படும் வகையில் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து அவ்வப்போது, ஏதாவது காரணம் சொல்லி எங்களை பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டதால் ஒருவித பதற்றத்திலேயே பணியாற்றுகிறோம்.

முந்தைய அரசின் நடவடிக்கையால் நிம்மதி இழந்து பரிதவிக்கிறோம். முதல்வரின் கருணையை எதிர்பார்க்கிறோம். தேர்தல் பிரசாரத்தின்போது, உங்கள் தொகுதியில் முதல்வர் கோரிக்கை பெட்டியிலும் மனு போட்டு நல்ல செய்தியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

38 mins ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்