தமிழகம்

அதிக மதுக்கடைகள் திறந்ததே அதிமுக ஆட்சியின் சாதனை: குஷ்பு

செய்திப்பிரிவு

`தமிழகத்தில் அதிகளவில் மதுக்கடைகளை திறந்ததே அதிமுக ஆட்சியின் சாதனை’ என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்காக எந்த திட்டங்களையும் அதிமுக ஆட்சி செயல்படுத்தவில்லை. டாஸ்மாக் கடைகளை அதிகமாக திறந்ததுதான் அதிமுக ஆட்சியின் சாதனை. திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT