சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 13) இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 14, 15-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 16-ல் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று சில பகுதிகளில் இடியுடன் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலைஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.