“ஓராண்டில் 7 லாக்கப் மரணங்கள்... தமிழகத்தில் அரசு இயங்குகிறதா?” - அண்ணாமலை கேள்வி 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக கூறியுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் அரசு இயங்குகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் அரசு இயங்குகிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.

கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா???" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்