ஈசிஆரில் ஆன்மிக - கலாசார பூங்கா, சென்னையில் ‘எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்’ திட்டம்: சுற்றுலாத் துறையின் 28 அறிவிப்புகள் 

By செய்திப்பிரிவு

சென்னை: ஒருநாள் திருப்பதி சுற்றுலாவிற்கான விரைவு தரிசன நுழைவுச் சீட்டுகளை 150-ல் இருந்து 1,000 ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை மேம்படுத்த கன்னியாகுமரியில் கூடுதலாக ஒரு புதிய படகு இறங்கு தளம் அமைத்தல், கிழக்கு கடற்கரை சாலையில் "ஆன்மிக, கலாசார, சுற்றுச்சூழல் பூங்காவை" அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், சென்னை தீவுத் திடலில் உள்ள டிரைவ்-இன் உணவகத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்துதல், "சென்னை விழா" என்ற பெயரில் ஒரு தேசிய கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவு விழா, சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் "எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்" என்ற பயணத் திட்டம் தொடங்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 28 முக்கிய அறிவிப்புகள்:

> தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நான்கு முக்கிய கோயில்களில் முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடி ய ஒலி-ஒளிக்காட்சி இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து அமைக்கப்படும்.

> "தென்னிந்தியாவின் ஸ்பா" என்று அழைக்கப்படும் குற்றாலம், நவீன வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை மேம்படுத்த கன்னியாகுமரியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக ஒரு புதிய படகு இறங்கு தளம் அமைக்கப்படும்.

> கன்னியாகுமரியில் உள்ள முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத் தலங்கள் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.

> முத்துப்பேட்டை அலையாத்திக் காடு பகுதியில் படகு சவாரி, நடைபாதைகள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> பூண்டி அணைக்கட்டு பகுதியில் நீர் விளையாட்டுக்கள், ப ட கு சவாரி, சாகச விளையாட்டுகள் மற்று ம் பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கடற்கரைப் பகுதியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, நடைபாதை, கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பாளைம் ஏரியி ல் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் , பார்வையாளர் மாடம் மற்றும் பல்வேறு வசதிகள் ரூ.1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

> செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.1.50 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலைப் பகுதியில் சாகச சுற்றுலா, திறந்தவெளி முகாம்கள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> தூத்துக்குடி கடற்கரையில் நீர் விளையாட்டுகள் மற்றும் கடற்கரை விளையாட்டுகள் போன்றவைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கடற்கரை சுற்றுத்தலமாக ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> சுற்றுலாத் துறை பிற துறைகளுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் புதிய சாலைகள் அமைத்தல், தற்போதுள்ள சாலைகளை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். (நெடுஞ்சாலைத் துறை – ரூ.100 கோடி + ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை –ரூ.50 கோடி)

> கிழக்கு கடற்கரை சாலையில் "ஆன்மிக, கலாச்சார, சுற்றுச்சூழல் பூங்காவை" அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

> தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உணவகங்கள் நவீனப்படுத்தப்பட்டு புதிய வணிகச் சின்னத்துடன் (Re-branding) சந்தைப்படுத்தப்படும்.

> சென்னை தீவுத் திடலில் உள்ள டிரைவ்-இன் உணவகம் ரூ.50 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

> சுற்றுலாப் பயணிகளின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் (24X7) செயல்படும் சுற்றுலா உதவி மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.

> தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வணிக செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் மின்னணு மேலாண்மை மென்பொருள் (Hotel Management Software) ரூ.50 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

> தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒருநாள் திருப்பதி சுற்றுலாவிற்கு விரைவு தரிசன நுழைவுச் சீட்டுகளை 150-லிருந்து 1000-மாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தொகுப்பு சுற்றுலா தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து தொடங்கப்படும்.

> தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் Caravan வாகன நிறுத்துமிட பூங்காக்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு இடங்களில் அமைக்கப்படும்.

> மாமல்லபுரத்தில் உள்ள மரகதப் பூங்காவில் ஒளிரும் பூங்கா மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் பொது-தனியார் பங்களிப்புடன் (PPP)அமைக்கப்படும்.

> தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களின் கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை காட்சிப்படுத்த, "சென்னை விழா" என்ற பெயரில் ஒரு தேசிய கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவு விழா சென்னையில் ரூ.1.50 கோடி செலவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும்.

> "வீர விளையாட்டு விழா" என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி செலவில் நடத்தப்படும்

> சென்னையில் மலர், காய்கனிகள் மற்று ம் பனைப்பொருட்கள் கண்காட்சி - கோடை விழா, ரூ.25 இலட்சம் செலவில் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து நடத்தப்படும்.

> வண்டலூர், கோவளம் மற்றும் ஏற்காடு ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் Quick Bites என்னும் சிறு உணவகம் (உணவு மையம்) ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> சுற்றுலாப்பயண அமைப்பாளர்கள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்கள் சுற்றுலாத் துறையில் பதிவுகள் மேற்கொள்ள உரிய வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்படும்

> சுற்றுலா வழிகாட்டிகள் (Tourist Guide) பதிவு செய்யவும், அவர்களின் திறனை மேம்படுத்தவும் ரூ.50 லட்சம் மதிப்பில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்படும்.

> சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் "எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்" என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும். ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

> ஆண்டு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொருட்காட்சிகள் நடைபெறும் வண்ணம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சென்னை தீவுத்திடல் மேம்படுத்தப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

வணிகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்