சித்திரை மாத அமாவாசை: சதுரகிரியில் 13,000 பக்தர்கள் வழிபாடு

By செய்திப்பிரிவு

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரியில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை- விருதுநகர் மாவட்ட எல்லையில் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதை முன்னிட்டு குறிப்பிட்ட தினங்களையொட்டி 4 நாட்களுக்கு மட்டும், சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, கடந்த 28-ம் தேதி முதல் இன்று (மே 1) வரை சதுரகிரி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அமாவாசை தினமான நேற்று சதுரகிரி மலையில் சுமார் 13 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர். அதிகாலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

முகக்கவசம் மற்றும் கரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சுற்றுச்சூழல்

40 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்