சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பரவலாக திமுக வெற்றி முகம் கண்டுவருகிறது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி, 9 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.
பேரூராட்சிகளிலும் திமுக அதிக இடங்களில் வெற்றி முகம் கண்டுள்ளது. 142 இடங்களில் திமுக முந்துகிறது. அதிமுக 19 இடங்களிலும், பாஜக மூன்று இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அமமுக ஓரிடத்தில் முன்னிலை வகிக்கிறது. நகராட்சிகளைப் பொறுத்தவரை திமுக 38 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், பாமக ஓரிடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:
ஈரோடு மாவட்டம்:
* வெங்கம்பூர் பேரூராட்சி: 2வது வார்டு- சேட்டு, திமுக.
* கிளாம்பாடி பேரூராட்சி: 1வது வார்டு- சுமதி, சுயேச்சை
* பாசூர் பேரூராட்சி: 2வது வார்டு தீபக்- திமுக
* பாசூர் பேரூராட்சி: 3வது வார்டு- சின்னபொண்ணு, சுயேச்சை
* ஊஞ்சலூர் பேரூராட்சி: 1வது வார்டு- பிரேமாதேவி, சுயேச்சை
* ஊஞ்சலூர் பேரூராட்சி: 2வது வார்டு சபானா- சுயேச்சை
* வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி: 1வது வார்டு- மாணிக்கம், திமுக
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேரூராட்சியில் நடந்த தேர்தலில் 1வது வார்டில் அதிமுகவை சேர்ந்த நம்பிராஜன் வெற்றி பெற்றுள்ளார் இரண்டாவது வார்டு அதிமுகவைச் சேர்ந்த வானமாமலை வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சி 15 வார்டுகளில் 1 - 5 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் :
1. ராஜேஸ்வரி (திமுக)
2. பேச்சியம்மாள் (அதிமுக)
3. மகாலிங்கம் (திமுக)
4. சேர்ம செல்வன் (திமுக)
5. ஈணமுத்து (அம்முக)