ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை ஏற்க முடியாது: கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

By செய்திப்பிரிவு

‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பிரதமரின் கருத்தை ஏற்க முடியாது. அடிக்கடி தேர்தல் நடப்பது தான் நல்லது,’’ என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடி எம்பி அலுவல கத்தில் தேசியக்கொடியேற்றிய கார்த்தி சிதம்பரம் பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பிரதமரின் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை ஏற்க முடியாது. ஜனநாயகத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் அரசாங்கத்தை நடத்த முடியும்.

மக்களின் மனநிலை, கோபம், எதிர்பார்ப்பை தெரிந்து கொள்ள அரசியல் கட்சியினர் அடிக்கடி மக்களை சந்திக்க வேண்டும். அதற்கு அடிக்கடி தேர்தல் நடத்துவதுதான் நல்லது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் குழப்பம், கரோனாவால் வருவாய், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்காதது போன்றவற்றால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வீழ்ச்சிக்கு முன்பு இருந்த நிலையைக் கூட அடையவில்லை. அதனால் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ஏற்க முடியாது. தஞ்சையில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது வருந்தத்தக்கதுதான். ஆனால் காரணம் தெரியும் முன்பே பாஜக அதற்கு மதச்சாயம் பூசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். பொய்ப் பிரச்சாரம் செய்வது அவர்களது வாடிக்கை. இவ்வாறு அவர் கூறினார். மாங்குடி எம்எல்ஏ உடன் இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE