பூஸ்டர் தடுப்பூசி திட்டம் நாளை தொடக்கம்; இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜன. 4-வது வாரத்தில் கலந்தாய்வு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 4-வது வாரம் தொடங்குகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அடையாறு மண்டலம், 175-வது வார்டு 17-வது குறுக்குச் சாலையில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்ற மெகாதடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசிபோடும் பணியை நாளை (ஜன.10)பட்டினம்பாக்கம் இமேஜ் அரங்கில்முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும்பணி நடைபெறும். அந்தவகையில் தமிழகத்தில் 35 லட்சத்து 46ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களாகக் கண்டறியப்பட் டுள்ளனர்.

27 சதவீத நீட் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இதன்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு கலந்தாய்வை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம்அறிவித்திருக்கிறது. அந்தவகையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களான 15% இடங்களுக்கு கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும். அதன்பிறகு ஜனவரி 3-வது வாரத்தில் தமிழகத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 4,319 இடங்களும், சுயநிதிகல்லூரிகளில் 1,680 இடங்களும் சேர்த்து 5,899 இடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி 4-வது வாரத்தில் தொடங்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது தொற்று

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 6,465, பெண்கள் 4,513 என மொத்தம் 10,978 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 10 பேர் உயிரிழந்தனர்.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 46பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5,098, செங்கல்பட்டில் 1,332, திருவள்ளூரில் 591, கோவையில் 585, மதுரையில் 314, காஞ்சிபுரத்தில் 309 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கரோனா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்