சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் 34 மாணவர்களுக்கு கரோனா

By செய்திப்பிரிவு

சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் மாதிரிபள்ளியில் நீட் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பயிற்சிஅளிக்கப்படுகிறது. அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி, படித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறப்பு பயிற்சிவகுப்பில் படித்து வந்த,சென்னை மேற்கு மாம்பலத்தைசேர்ந்த மாணவர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பயிற்சி மையத்துக்கு வந்து, விடுதியில் தங்கிப் படித்துள்ளார்.

கடந்த 28-ம் தேதி அந்த மாணவருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனைமேற்கொண்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பயிற்சி மையவிடுதியில் தங்கிப் படிக்கும் 71 மாணவர்களுக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வந்த பரிசோதனை முடிவில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 24 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 34பேரையும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறைஅதிகாரிகளிடம் கேட்டபோது,“இந்தப் பள்ளியில் 34 மாணவர்களுக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு உள்ளதால், அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கும் பரிசோதனைமேற்கொள்ள நடவடிக்கைஎடுக்கப்பட்டு உள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் மரபணுமாற்றம் கண்டறியும் பரிசோதனையும் நடந்து வருகிறது. தற்போது மாணவ, மாணவிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

15 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

9 hours ago

மேலும்