கடலூரில் தக்காளி கிலோ ரூ 30-க்கு விற்பனை

By க.ரமேஷ்

கடலூரில் முதுநகர் பகுதியில் தக்காளி ஒரு கிலோ ரூ 30-க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்கடையில் பொதுமக்கள் குவிந்து போட்டிப்பேட்டுக் கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர்.

கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ரூ120 விலைஎன உயர்த்து உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. ஆப்பிள் அந்தஸ்து தக்காளிக்கு வந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தக்காளிளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் தக்காளி விலை ரூ 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள செல்லாங்குப்பம் பகுதியில் ஒரு காய்கறி கடையில் தக்காளி கிலோ ரூ 30 க்கு தக்காளியும், வெங்காயம் கிலோ ரூ 25க்கு விற்பனை செய்யப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அக்கடையில் குவிந்து போட்டிப்போடுக் கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர்.

இது கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த காய்கறி கடை உரிமையாளர் ராஜேஷ் கூறுகையில் ”கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து சுமார் 1.5 டன் தக்காளி எங்கள் கடைக்கு வந்தது. தற்போது தமிழகம் ரூ 100 முதல் ரூ 150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ தக்காளி ரூ 30க்கு விற்பனை செய்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்ற நோக்கில் விற்பனை செய்து வருகிறோம். கரோனா காலத்தில் 5 கிலோ காய்கறிகள் ரூ 100க்கும், வெங்காயம் கிலோ ரூ 100க்கு விற்பனை செய்யப்பட்ட போது நான் ரூ 10 விற்பனை செய்தேன். தக்காளியை குறைந்த விலையில் விற்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் தக்காளி விற்பனை செய்யப்பட்டது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE