தமிழகம்

பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் பலியான வழக்கு: உரிமையாளர் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன்

கி.மகாராஜன்

சிப்பிபாறை பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் பாலியான வழக்கில் ஆலை உரிமையாளர் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறை ராஜம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 20.3.2020ல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் பலியாகினர். இந்த வழக்கில் கைதான ஆலை உரிமையாளரின் மனைவி செல்வி, தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவு: கடந்த அக்.22 முதல் மனுதாரர் நீதிமன்ற காவலில் உள்ளார். குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. இவர் மீது வேறு வழக்குகள் இல்லை. எனவே, ஜாமீன் மனு அனுமதிக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு விசாரணை நீதிமன்றத்தில் தினசரி காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT