பனை உணவு பொருட்களை சத்துணவில் சேர்க்க வேண்டும் : பனை திருவிழாவில் தீர்மானம் நிறைவேற்றம்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

மதிய உணவுடன் பனைபொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை சத்துணவில் சேர்க்க வேண்டுமென,
மன்னார்குடி அருகே நடைபெற்ற பனை திருவிழாவில் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றி கிரீன் நீடா அமைப்பு சார்பில் பனை விதைகள் விதைக்கும் பனைத் திருவிழா இன்று நடைபெற்றது. அதையொட்டி ஏரிக்கரையில் கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் கிராமியப்பாடல் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் பனை திருவிழா தொடங்கியது. பின்னர் நிகழ்ச்சியின் தொடக்கமாக கிரீன்நீடா ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு நோக்கஉரையாற்றினார்.

மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றியதுடன், வேதாரண்யம் ஆசிரியர் கார்த்திகேயன் தயாரித்த பனங்கிழங்கை மூலப்பொருளாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட கூடை கேக்கினை அறிமுகம் செய்து வைத்தனர்.

பனைத் திருவிழாவில், பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல். பள்ளிக்கூட மாணவர்களுக்கு மதிய உணவுடன் பனம்பழம், பனங்கிழங்கு, கருப்பட்டி, மற்றும் பதநீர் போன்றைவைகளை மாதத்துக்கு ஒருமுறை வழங்கவேண்டும் பனை வாழ்வியல் சார்ந்த தி¬ப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்,அனைத்து வகுப்புகளிலும் பனை குறித்த பாடத்திட்டம் சேர்க்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து பனைமரத்தின் முக்கியத்துவம் குறித்து ஏஐடியுசி மாநில நிர்வாகி சந்திரகுமார், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஷோபாகணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாரதிமோகன், ராஜேந்திரன், ரோட்டரி பிரமுகர் சுதாகரன், ஊராட்சித் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கலைக்கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி,பொன்னையா ராமஜெயம் வேளாண்கல்லூரி என்எஸ்எஸ் மாணவ,மாணவிகள் உள்ளூர் இளைஞர்கள் பொதுமக்கள் இணைந்து ஏரிக்கரை முழுவதும் பனை விதைகளை விதைத்தனர். முன்னதாக இணைய ஒருங்கிணைப்பாளர் டி.செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் டேனியல் வில்சன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்